ஒச்சாயி Ochaayi
"திரைகடல் ஓடி, தமிழ்த் திரைப்படங்களை நாடி", என்ற புதிய தொடருக்கு ஏற்ப பிரிஸ்பேன் நகரில் தமிழ்த்திரைப்பட வெளியீடுகள் திங்கள்தோறும் உற்சாகத்தை ஏற்படுத்தி வருகின்றன. அவ்வகையில், ஒத்த குணம் நம்மிடம் ஓங்கி வளர்வதற்காக ஒச்சாயி (ஒத்தாயி) உதவும் என நம்புவோமாக.
தகரம், சகரமாக மாறுவதை நாம் சில சொற்களில் காணலாம். அதுபோல, ஒத்தாயி ----> ஒச்சாயி.
எல்லா குணங்களிலும் ஒத்த அழகுடையவள் என ஒத்தாண்டம்மனைக் கூறுவது வழக்கம்.
ஒத்தாண்டம்மன் - ஒச்சாண்டம்மனாகி, அதிலிருந்து மறுவியப் பெயர் ஒச்சாயி.
எந்தவொறு விளக்கத்திற்கும் அய்யன் வள்ளுவனே வழிகாட்டி....
ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப்படும். 214
இச்சமயத்தில், பிரிஸ்தரணியில் தமிழ்த்திரைபடங்களை திரையிட்டு வரும் பேரா. இளையதம்பி செல்வநாதன் மற்றும் குமுக ஆர்வலர் பழனிச்சாமி போன்றோரின் முயற்சிகளை நன்றி பாராட்டுவோம்.
பலருக்கு தமிழில் தட்டெழுத உதவிவரும் எ-கலப்பை முகுந்திற்கு நன்றி. புதிய மென்பொருளுக்கு செல்க - http://code.google.com/p/ekalappai/downloads/detail?name=eKalappai-3.0-beta3-installer.exe&can=2&q=
தமிழன்பகலா,
கண்ணன் நடராசன்
0 Comments:
Post a Comment
<< Home