'புத்தம்புது பூமி வேண்டும்'
வணக்கம் கவிப்பேரரசர் அவர்களே,
'கடல் மேல் சிவப்புக் கம்பளம் விரித்து
"பிரிஸ்பேனில்"(ஐரோப்பாவில்) குடிபுகுவோம்'
கடல் கடந்திருந்தாலும் கூட, இடம் மாறி இருந்தாலும் கூட, தமிழ்ப்பெருமக்கள் தடம் மாறிப் போக மாட்டார்கள் என்பதற்கு நீங்களெல்லாம் உதாரணம் என்று கூறியுள்ளீர்கள். அயலகத்தில் வாழும் தமிழர்களை பார்த்தபோது எனக்கு நம்பிக்கை வருகிறது என்று இலண்டன் மாநகரத்தில் சில ஆண்டுகளூக்கு முன்னர் தெரிவித்துள்ளீர்கள். தமிழ் கவிதைக்கு பேரரசராக திகழும் நீங்கள் பிரிஸ்பேன் தமிழ் பாடசாலையில் தீந்தமிழில் உறையாற்றிய பாங்கும், தமிழ்மொழியின் தொன்மையையும்,தமிழ் சொற்களில் உள்ள ஒலியின் பெருமையையும் நாங்கள் மறவாமல் இருக்க அழகாக தெரியப்படுத்தியதிற்கு,இரு கரம் கூப்பி எங்கள் பணிவான நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்கள் நேரத்தைச் செலவழித்து, எங்கள் அனைவரையும் தமிழால் மகிழ்வித்ததற்கு நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம். மீண்டும் உங்கள் வருகைக்காக காத்திருப்போம்.நன்றி.
"உவப்பத் தலைக்கூடி உள்ளம் பிரிதல்,
அனைத்தே புலவர் தொழில்." (திருக்குறள்-40/394)
அன்புடன்,
கண்ணன் நடராசன்
0 Comments:
Post a Comment
<< Home